தமிழக செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் டிஸ்சார்ஜ்

ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளங்கி வருகிறார். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல மொழிகளில் பல்வேறு ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று காலை 7.30 மணிக்கு அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைவு காரணமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்,ரகுமான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்