தமிழக செய்திகள்

அரியர் மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு...!

அரியர் மாணவ-மாணவிகளுக்கும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங், கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த தேர்வுகள் பிப்ரவரி 1-ந்தேதி தொடங்கி 20-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கடந்த 21-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அரியர் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி இன்று அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு