தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காடுசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் சாமனூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது