தமிழக செய்திகள்

மது விற்றவர் கைது

தினத்தந்தி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் முத்தம்பட்டி மங்களம்கொட்டாய் பகுதியில் மதுவிலக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்களம் கொட்டாயில் ஒரு வீட்டின் பின்புறம் பச்சை நிற பையுடன் நின்றவரிடம் விசாரித்தனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பதும், அவர் பையில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது