தமிழக செய்திகள்

மத்திகிரி அருகேவாலிபரை தாக்கிய 3 பேர் கைது

மத்திகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூரு துவாரகா நகர் 2-வது கிராசை சேர்ந்தவர் சரத் என்கிற லல்லு (வயது 23). இவர் மத்திகிரி அருகே மிடுகரிப்பள்ளியில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் பரத் (28), சுனில் (31). நேற்று முன்தினம் பரத் தரப்பினர் லல்லுவுடன் தகராறு செய்தனர். அப்போது சரத்தை அவர்கள் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து பரத் (28), சுனில் (31), திம்மசந்திரத்தை சேர்ந்த மதன்குமார் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் அட்கோ போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்