தமிழக செய்திகள்

விவசாயியை தாக்கிய அண்ணன் மகன் கைது

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினைக்குரிய நிலத்தின் வழியாக நடராஜன் சென்றாராம். அப்போது அங்கு வந்த அண்ணன் மனைவி மற்றும் 3 மகன்கள் நடராஜனை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த அவர் ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து அண்ணன் மகன் சுரேஷ் (35) என்பவரை கைது செய்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்