ஓசூர்:
ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 44). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரவி (48). இவர் லட்சுமி நாராயணனின் சகோதரியிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் லட்சுமி நாராயணன் பணத்தை திரும்ப கேட்டார். அப்போது ரவி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் லட்சுமி நாராயணனை, ரவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி நாராயணன் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர்.