தமிழக செய்திகள்

பென்னாகரம் அருகேபோலி டாக்டர் கைது

தினத்தந்தி

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

கிளினிக்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60). இவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். பி.எஸ்சி. வரை வரை மட்டுமே படித்துள்ள ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை துணை இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையில் அதிகாரிகள் கொட்டாவூரில் உள்ள கிளினிக்கிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அதிரடியாக கிளினிக்கிற்குள் சென்று சோதனை நடத்தினர்.

கைது

அதில் முனுசாமி முறையான மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் போலி டாக்டர் முனுசாமியை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது