தமிழக செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடியவர் கைது

ஓட்டப்பிடாரம் அருகே, வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே, வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

ஓட்டப்பிடாரம் அருகே சவாலாபேரி பள்ளி அருகே நேற்று முன்தினம் இரவில் புளியம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி தாலுகா கொண்டாநகரம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சொர்ணம் மகன் ரமேஷ் என்ற ராமையா (வயது 36) என்பவர் தெரியவந்தது.

வீடுகளில்....

இவர் கடந்த மாதம் 29-ந்தேதி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (62) என்பவர் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தையும், புளியம்பட்டி அருகே உள்ள சவாலாப்பேரி இந்திராகாலனி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் ரூ.60 ஆயிரத்தையும் திருடிச் சென்றவர் என தெரிய வந்தது.

இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமையாவை கைது செய்தனர்.

83 வழக்குகள்

அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்