தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கேவிலில் ஆடி மாத பிரதோஷ விழா கெண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு கேவிலில் மாலை 4 மணிமுதல் சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை, மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வலம் வருதல், தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கேவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்