தமிழக செய்திகள்

பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி:போக்சோவில் வியாபாரி கைது

வருசநாட்டில் பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வியாபாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர், அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறியடித்து ஓடினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியிடம் கேட்டனர். அப்போது முருகன் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக மாணவி கூறினார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு