தமிழக செய்திகள்

பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர் கைது

பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ராமு (வயது 51). கார் டிரைவராக உள்ளார். இவர், கடந்த 19-ந் தேதி இரவு, வேலை முடிந்து தனது வீட்டுக்கு ஷேர் ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது காலை, ஷேர்ஆட்டோ ஓட்டிய டிரைவர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு பின்னால் வைத்தபடி பயணித்தார். காலை தான் உட்கார்ந்திருக்கும் சீட்டில் வைக்க, ஷேர் ஆட்டோ டிரைவர் சந்தானம் (53) கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையொட்டி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையாக மாறியது. டிரைவர் சந்தானம், ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, பயணி ராமுவிடம் சண்டை போட்டார். அப்போது திடீரென்று ராமுவின் கை சுண்டு விரலை, டிரைவர் சந்தானம் கடித்து துப்பி விட்டதாக தெரிகிறது. கைவிரல் பாதிக்கப்பட்ட ராமு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசில் ராமு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஷேர் ஆட்டோ டிரைவர் சந்தானம் கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு