தமிழக செய்திகள்

உடுமலை நகராட்சி: பாதாள சாக்கடை அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம்

உடுமலை நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்ற தானியங்கி எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் வீடுகளில் இருந்து கழிவு நீர் குழாய்கள் மூலம் பிரதான குழாய்களுக்கு வந்து, ஏரிப்பாளையத்தில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சேரும். இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்களில் ஆங்காங்கு ஆழ்துளை இறங்குகுழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பாதாளசாக்கடை குழாய்களில் ஆங்காங்கு அடைப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. அப்போது நகராட்சி வாகனம் வந்து, அந்த தொட்டிகளின் மூடிகளை திறந்து அடைப்பை நீக்கி செல்கின்றன. அத்துடன் சாலை பகுதியில் உள்ள தொட்டிகள் மீது வாகனங்கள் ஏறி இறங்கி செல்வதால் தொட்டிகளின் மூடி பழுதடைந்து, அந்த மூடிகளின் விளிம்புகள் வழியாகவும் கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சுகாதாரம் கெடுகிறது.

இதைத்தொடர்ந்து பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்பை அகற்றுவதற்காக,நகராட்சி நிர்வாகம் ரோபோடிக் என்கிற தானியங்கி எந்திரத்தை வாங்கியுள்ளது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி தலைவர் மு.மத்தீன், துணைத்தலைவர் சு.கலைராஜன், நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு