தமிழக செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் வருடந்தோறும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை குரு பாலஜனாதிபதி ஏற்றி வைத்தார்.

முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது