தமிழக செய்திகள்

குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்

சிங்கம்பாளையம் கிராமத்தில் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சிங்கம்பாளையம் கிராமத்தில் செம்மரம் வெட்டுதல், கடத்துதல், போக்சோ, சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆந்திர மாநிலம் சேஷாசல வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டுவதற்காக இந்த கிராமத்தில் இருந்து இளைஞர்கள் சிலர் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் அந்த குற்றச்செயல் புரியாமல் இருக்கவும், இவர்களை அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் அறிவுரை வழங்கப்பட்டது.

இதில் கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், குரிசிலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு