தமிழக செய்திகள்

தாய் அரவணைப்பில் தூங்கும் குட்டி யானை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

தாய் யானையின் துதிக்கைக்குள் குட்டி யானை படுத்து தூங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய் யானையை பிரிந்து குட்டி யானை ஒன்று தனியாக சுற்றித்திரிந்தது. வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு தாய் யானை இருந்த கூட்டத்துடன் விட்டனர். மேலும் டிரோன் மூலமாக குட்டி யானை தாய் யானை கூட்டத்துடன் இருப்பதை கண்காணித்து வந்தனர். தாய் யானையுடன் குட்டி யானை நடமாடிக் கொண்டிருந்தது. இந்த குட்டி யானையை நேற்று வனத்துறையினர் கண்காணித்தபோது பன்னிமேடு எஸ்டேட் 2-வது பிரிவு தேயிலை தோட்ட பகுதிக்கு அருகில் அலவாங்கு மேடு என்ற இடத்தில் தாய் யானையுடன் சிறிதுநேரம் விளையாடிக் கொண்டு இருந்தது. பின்னர் தாய் யானை வனப்பகுதியில் உள்ள பாறையின் அருகே படுத்துக்கொண்டது. அப்போது தாய் யானையின் அரவணைப்பில் அதன் துதிக்கைக்குள் அந்த குட்டி யானை படுத்து தூங்கியது.

பிரிந்து சென்ற குட்டி யானையை தாயுடன் சேர்க்கும்போது சில தாய் யானைகள் குட்டியை சேர்க்காது. ஆனால் இந்த தாய் யானை ஒன்றாக சேர்ந்து சுற்றித்திரிவதும், ஒன்றோடு ஒன்று படுத்து உறங்குவதுமாக உள்ளது. இது வனத்துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தாய் யானையின் துதிக்கைக்குள் குட்டி யானை படுத்து தூங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்