தமிழக செய்திகள்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் 8,500 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு,

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,800 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 8,519 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 8,500 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. அதிக அளவில் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு