எட்டயபுரம்:
கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் பஸ் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சிவபெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் புதூர் ஒன்றிய பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் வேலவன், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய துணைத்தலைவர் முருகன், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் மணிகண்டன், இளைஞர் அணி ஒன்றிய துணைத்தலைவர் ரமேஷ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.