தமிழக செய்திகள்

விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்

விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சென்னை,

விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றிய இரண்டு விவசாய விளைபொருள் விற்பனை மசோதாக்களை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்ற பாஜக அரசு முனைகிறது.

எனவேதான் பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநிலங்களின் விவசாயிகள் தெருக்களுக்கு வந்து போராடுகிறார்கள். அஇஅதிமுக அரசோ மசோதாக்களை ஆதரித்து நல்லபிள்ளையாக நடந்து கொள்கிறது!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை குவின்டால் ஒன்றுக்கு ரூ1150. ஆனால் பல விவசாயிகள் ரூ850க்கு தனியார் வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். இது ஏன் என்று தமிழ்நாடு அரசு விளக்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு