தமிழக செய்திகள்

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் செயலாளர் இராம காளியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விளாத்திகுளம் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் கனகவேல் முன்னிலை வகித்தார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தபோதும், இதுவரை தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பதை கண்டித்தும், தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பிரசார அணி தலைவர் சீனிவாசன், விளாத்திகுளம் 8-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி, ராமகாளியப்பன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்