தமிழக செய்திகள்

சென்னையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மேலிட குழு சந்திப்பு

தமிழகத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ய, 4 பேர் கொண்ட மேலிட குழு அமைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் பாஜகவினர் மீது அரசியல் பழி வாங்கும் விதத்தில் தி.மு.க. அரசு செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.இதையடுத்து தமிழகத்தில் பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்ய, பாஜக தேசிய தலைமையால் 4 பேர் கொண்ட மேலிட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பாஜக மேலிட குழு இன்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்கள்.

இந்த சந்திப்பின் போது மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக புனையப்பட்டுள்ள வழக்கு விவரங்கள், அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இணைத்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் தங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பாஜக மேலிட குழு வலியுறுத்தினார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்