திருச்சி,
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நம்பர் ஒன் டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த நபர் 35 வயது மதிக்கத்தக்க பெண் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.