தமிழக செய்திகள்

நூல் வெளியீட்டு விழா

குடியாத்தத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் புலவர் வே.பதுமனாரின் 3 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு செயலாளர் வக்கீல் கே.எம்.பூபதி வரவேற்றார். அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகரமன்ற தலைவர் டி.எஸ்.சவுந்தர்ராஜன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் கே.ஜவரிலால்ஜெயின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாக்குழுத் தலைவரும், வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன், நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். தமிழியக்கப் பொதுச்செயலாளர் அப்துல்காதர் நூல்கள் ஆய்வுரை வழங்கினார். ரோட்டரி முன்னாள் தலைவர் என்.எஸ்.குமரகுரு, அரிமா சங்கம் எம்.கே.பொன்னம்பலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். புலவர் வே.பதுமனார் ஏற்புரை வழங்கினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்