தமிழக செய்திகள்

வீட்டில் நகை திருடிய சிறுவன், சிறுமி கைது

பாபநாசத்தில் வீட்டில் நகை திருடிய சிறுவன், சிறுமி கைது செய்யப்பட்டனர்

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் பொதிகையடி வடக்கு தெருவை சேர்ந்தவர் வெலிங்டன் (வயது 38). இவர் தனது மனைவி நகைகளை வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்தார். கடந்த மாதம் 16-ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவை திறந்து நகைகளை எடுக்கச் சென்றார். அப்போது, அதில் இருந்த தங்க சங்கிலி, கம்மல்கள், வளையல்கள் திருட்டு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து வெலிங்டன் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நகைகளை பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன், 16 வயது சிறுமி ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்