துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த அ. புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கைக்காட்டியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் இருந்த ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிவிட்டு, கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு சென்றுள்ளனர். பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தால் நகை தப்பியது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.