தமிழக செய்திகள்

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

கடத்தூர்

கோபி பாலக்காடு வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 75). டாக்டர். இவர் கடந்த 3-11-2012 அன்று கோவை ஒண்டிப்புதூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 41 பவுன் நகையும் திருட்டுப்போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த இப்ராஹிம் என்கிற பாலமுருகனை (32) கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி விசாரித்து, 'இப்ராஹிமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.200 அபராதமும் விதித்து,' தீர்ப்பு கூறினார். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு