தமிழக செய்திகள்

காளை விடும் விழா

படவேடு கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு கிராமத்தில் 125-ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

காளை விடும் விழாவை சரவணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் வேகமாக ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆர்.வி.சேகர உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவையொட்டி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்