தமிழக செய்திகள்

போலி ஆவணம் மூலம் வேறு ஒருவர் நிலத்தை விற்று ரூ.20 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபர் கைது

போலி ஆவணம் மூலம் வேறு ஒருவர் நிலத்தை விற்று ரூ.20 லட்சம் மோசடி செய்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவர், டீத்தூள் வாங்கி விற்கும் குடோன் வைத்துள்ளார். இவர், தன்னுடைய நண்பரான சரவணன் என்பவருடன் சேர்ந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழில் அதிபர் குரு தண்டபாணி (40) என்பவர் மூலமாக சென்னை திரு.வி.க. நகரில் உள்ள ஒரு காலி இடத்தை வாங்க ரூ.91 லட்சம் விலை பேசி அதற்கு ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்தனர். அதை வாங்கிய குருதண்டபாணி, அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

பின்னர் நடத்திய விசாரணையில், குரு தண்டபாணி போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு சொந்தமான இடத்தை தங்களுக்கு விற்றது தெரிந்தது.

இது குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின்பரில் திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் குரு தண்டபாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்