தமிழக செய்திகள்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயத்துறை பன்மடங்கு வளரும் - இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல்

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயத்துறை பன்மடங்கு வளரும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

பிற கொள்கை ஆதரவோடும், புதிய பாதையை உருவாக்கும் சீர்த்திருத்தங்களோடும் ஒரே தேசம், ஒரே சந்தை என்பதை நோக்கி தீர்க்கமாக முன்னேறவும், விவசாயத்துறை பன்மடங்கு ஆதாயம் ஈட்டுவதற்காகவும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள புதிய வேளாண்மை மசோதாக்கள் உதவிக்கரமாக இருக்கும்.

மத்திய அரசு அறிவித்தது, நல்ல முடிவு. விவசாயம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் தென் மாநிலங்கள் தலைமைத்துவ இடத்தை பெறுவதற்கு புதிய வேளாண் மசோதாக்கள் ஆட்டத்தை மாற்றும் போக்கு உடையதாக இருக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு நம்புகிறது.

இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் சதீஷ் ரெட்டி கூறுகையில், தென்னிந்தியாவில் துடிப்பான தனியார் துறையால் ஆதரிக்கப்படும் ஒரு வளமான சூழல் இருக்கிறது. இது மத்திய அரசு அறிவித்துள்ள புதிய சீர்த்திருத்த நடவடிக்கைகளின் பின்னணியில் விவசாயத்துறை பன்மடங்கு வளருவதற்கு உதவிக்கரமாக இருக்கும் என்றார்.

துணைத்தலைவர் சி.கே.ரங்கநாதன் பேசுகையில், புதிய வேளாண் மசோதாக்கள் விவசாயிகளின் வருமானங்களை பெருக்குவதாக இருக்கும் என்றார். மேற்கண்ட தகவல் இந்திய தொழில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்