தமிழக செய்திகள்

மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு- ஸ்டாலின் கண்டனம்

பெண்களை இழிவு படுத்தி பேசியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் திருமாவளவன் எம்.பி. மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை,

மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதியாதது ஏன்? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை எனத்தெரிவித்த ஸ்டாலின், பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டி திருமாவளவன் பேசினார். திருமாவளவன் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும்" எனத்தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்