தமிழக செய்திகள்

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மானூர்:

மானூர் அருகே எஸ்.மருதப்பபுரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது 45). கொத்தனாரான இவர் செட்டிகுறிச்சி அருகில் உள்ள நிலத்தை வாங்கினார். அந்த நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று முன்தினம் அந்த நிலத்தில் சிவராமன், அவருடைய மனைவி தங்கம் ஆகியோர் விவசாயம் செய்வதற்காக தண்ணீர் பாய்ச்சினர்.

அப்போது அங்கு வந்த செட்டிகுறிச்சியைச் சேர்ந்த குருசாமி (67), அவருடைய மனைவி பெருமாளக்காள் (60), மகன் சந்திரசேகர் (31), உறவினரான வெங்கடேஷ் (40) ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவராமன், தங்கம் ஆகியோரை தாக்கினர்.

இதில் காயமடைந்த அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், குருசாமி உள்ளிட்ட 4 பேர் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்