தமிழக செய்திகள்

மத்திய பஸ் நிலையத்தில் செல்போன் திருட்டு எச்சரிக்கை சுவரொட்டி

மத்திய பஸ் நிலையத்தில் செல்போன் திருட்டு எச்சரிக்கை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

திருச்சியில் பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமீப காலமாக பயணிகளிடம் செல்போன் மற்றும் நகைகள் திருட்டு அதிகமாக நடைபெறுவதாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. மத்திய பஸ் நிலையத்திலும் பயணிகள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் அறிவுறுத்தலின்பேரில், மத்திய பஸ் நிலையத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு குறித்த எச்சரிக்கை சுவரொட்டியை போலீசார் ஒட்டியுள்ளனர். அதில் பஸ் நிலைய நடைமேடைகளில் படுத்து தூங்கும்போதும், பஸ்களில் பயணம் செய்யும்போதும் செல்போன், நகைகள் உள்ளிட்ட பொருட்களை கவனமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், சந்தேக நபர்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு