கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - ரயில்வே நிர்வாகம்

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை- மதுரை எழும்பூர் இடையே சென்றுவரும் தேஜஸ் ரயில் மதுரையில் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் மட்டும் நின்று சென்றது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தேஜஸ் ரயிலில் சென்னைக்குப் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயில் நின்றுசெல்ல வேண்டும் என வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மதுரை- சென்னை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை