Image Courtesy:@IPL / File Image  
தமிழக செய்திகள்

சென்னை: ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 11 பேர் கைது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே. - டெல்லி அணிகள் மோதின.

தினத்தந்தி

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் 10 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 34 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்