தமிழக செய்திகள்

சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை

புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். #Murder

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாக்ஸர் முரளி. இவர் மீது வியாசர்பாடி, ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல வழக்குள் நிலுவையில் உள்ளன. மேலும், பாக்ஸர் முரளி ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புழல் சிறையில் இருந்த அவருக்கும் சக கைதிகள் 5 பேருக்கு ஏற்பட்ட மோதலில், கொடூரமான முறையில் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிக்கிய பாக்ஸர் முரளிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்ஸர் முரளி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்