சென்னை
சூளைமேடு ரவுடி பினு வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மாங்காடு மலையம்பாக்கம் பகுதியில் காலியாக கிடந்த லாரி செட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த விழாவுக்கு அவரது நண்பரகள் மற்றும் ரவுடிகள் வந்து இருந்தனர்
பிறந்தநாள் கேக்கை அரிவாளால் அவர் வெட்டினார். அப்போது கூடி இருந்த கூட்டாளிகள் வாழ்த்து கூறினார்கள். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த பினுவின் கூட்டாளிகள் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பலர் கத்தி- அரிவாளுடன் குத்தாட்டம் போட்டனர். பட்டாசுகளையும் வெடித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அங்கு கூடி அதனை வேடிக்கை பார்த்தனர். திடீர் என அங்கு வந்த போலீஸ் படையினர் அங்கு இருந்த 67 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
ரவுடி பினுவும் அவனது கூட்டாளிகளான விக்கி, கனகு ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பினு மீது 4 கொலை வழக்குகள் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சார்லஸ் சீதாராமன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
சினிமா பாணியில் அதிரடியாக நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் மலையம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.