தமிழக செய்திகள்

பயணிகள் வரத்து குறைவு: சென்னை எழும்பூர்-தஞ்சாவூர், கோவை-நாகர்கோவில் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பயணிகள் வரத்து குறைவால் சென்னை எழும்பூர்-தஞ்சாவூர், கோவை-நாகர்கோவில் ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பயணிகள் வரத்து குறைந்ததால் கீழ்க்கண்ட ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருச்சி-ராமேசுவரம் (06849), ராமேசுவரம்-திருச்சி (06850), கோவை-நாகர்கோவில் (02668), தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்கள் வருகிற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், நாகர்கோவில்-கோவை (02667), சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (06865) சிறப்பு ரெயில்கள் வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

* லோக்மான்ய திலக் டெர்மினாஸ்-கொச்சுவேலி (06163) சிறப்பு ரெயில் 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், கொச்சுவேலி-லோக்மான்ய திலக் டெர்மினாஸ் (06164) சிறப்பு ரெயில் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு