தமிழக செய்திகள்

கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை,

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் கள்ளக்குறிச்சி,கனியாமூர் பள்ளியில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்க கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .

மேலும் எல்.கே.ஜி. முதல் 4ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் துவங்குவது குறித்து 6 வாரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

9ம் வகுப்பு முதல் நேரடி வகுப்புகள் துவங்கிய பின் பள்ளியில் சுமூகமான நிலைமை நிலவுகிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு