தமிழக செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்

புதிய போலீஸ் கமஷினராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னையின் 110-வது போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.  

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்