தமிழக செய்திகள்

சென்னை: சாலை வழிகாட்டி பலகை சரிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருவருர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு