சென்னை,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் அவர், மக்களை உடற்பயிற்சி செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்,
அவருடன் இனைந்து பத்துக்கும் மேற்பட்டோர் சைக்கிளிங் சென்ற நிலையில், இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சைக்கிளிங் பயணத்தின்போது, அங்குள்ள தேநீர் கடையின் தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த ஆறாம் வகுப்பு மாணவனிடம் படிப்பு குறித்தும், ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.