சென்னை,
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தநிலையில், தற்போது இந்த அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் குடலிறக்க (ஹெர்னியா)அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது