சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.