தமிழக செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு - தமிழக அரசு தகவல்

முதலமைச்சர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 27-ந் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெறவிருந்தது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக 27-ந் தேதி நடைபெறவிருந்த ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று (புதன்கிழமை) எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர், அரியலூர் செல்வதாக இருந்தார். அந்த பயணம் 27-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது 27-ந் தேதி பயணமும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்