தமிழக செய்திகள்

சின்னமனூரில்மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி:கண்மாய் கரை உடையும் அபாயம்

சின்னமனூரில் மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியால் கண்மாய் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் ராட்சத குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் மதுரை நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையோரம் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி குழாய்களை பதிக்கும் பணி நடக்கிறது.

இந்நிலையில் சின்னமனூரில் இருந்து கோட்டூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கண்மாய் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தோண்டி குழாய்களை பதிக்கின்றனர். தற்போது கண்மாயில் மறுகால் பாயும் வரத்து வாய்க்கால் கரையினை உடைத்து ராட்சத குழாய்களை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கரையை உடைப்பதால் கண்மாய் பகுதியில் முல்லைப் பெரியாற்று பாசன நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால் விவசாயம் பாதிப்படைவதுடன், கண்மாய் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்றனர். எனவே கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்படையாத வகையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்