தமிழக செய்திகள்

பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு 6 ஆயிரத்து 925 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.23.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.50-க்கும், சராசரியாக ரூ.22.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 201-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு 4 ஆயிரத்து 767 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.29-க்கும், சராசரியாக ரூ.23.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 826-க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்