கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் - ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்

சென்னை,

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சட்ட வல்லுனர் குழு உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்