தமிழக செய்திகள்

கோவை: மணமக்கள் சென்ற கார் தனியார் பஸ்சில் மோதி விபத்து...!

கோவை அருகே மணமக்கள் சென்ற கார் தனியார் பஸ்சில் மோதி விபத்துக்கு உள்ளாது.

தினத்தந்தி

டி.என்.பாளையம்,

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் அருண் (வயது 28) என்பவருக்கும் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சக்திநகரை சேர்ந்த பிரான்ஸி (25) என்பவருக்கு இன்று காலை திருமணம் முடிந்து கோவையில் உள்ள வீட்டுக்கு உறவினர்களுடன் இரண்டு கார்களில் புறப்பட்டு சென்றனர்.

ஆப்பக்கூடலில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் மத்தளகொம்பு பிரிவு என்ற இடத்தில் வரும் போது மணமக்கள் சென்ற கார் வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி எதிரே வந்த தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் மோதியதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மணமக்கள் வந்த காரை டிரைவர் வந்த பிரதீப் குமார் (28), மணமக்கள் மற்றும் உடன் வந்தவர்கள் ஆகியோர் காயங்கள் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேபோன்று தனியார் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் தண்டபாணி (55) உட்பட பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

திருமண வீட்டார் வேறு வாகனம் ஏற்பாடு செய்து வீடு திரும்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது