தமிழக செய்திகள்

பெரியகுளம் சிறையில் கலெக்டர் திடீர் ஆய்வு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள சிறையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கிளை சிறை உள்ளது. இந்த சிறையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார். சிறையில் பராமரிக்கப்படும் வருகைப் பதிவேடு, உள்ளே மற்றும் வெளியே செல்லும் நபர்கள் குறித்த பதிவேடு, பார்வையாளர்கள் பதிவேடு, அலுவலர்கள் ஆய்வு பதிவேடு, தொகுதி பதிவேடு, கைதிகளின் அறை ஒதுக்கீடு பதிவேடு, போலீசாருக்கான பணி ஒதுக்கீடு பதிவேடு, உணவு பதிவேடு, இருப்பு பதிவேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என அவர் ஆய்வு செய்தார்.

பின்னர், கைதிகளுக்கு உணவு தயாரிக்கும் இடம், அடிப்படை வசதிகள், கைதிகளின் அறைகள் சுத்தமாவும் தூய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டார். உணவு தரமாக வழங்கப்படுகிறதா? விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று கைதிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கைதிகளை பார்க்க வந்த உறவினர்களிடம் சிறைக்காவலர்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்றும் கலெக்டர் கேட்டறிந்தார். ஆய்வின் போது பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன் உடனிருந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்