தமிழக செய்திகள்

சரக்கு வாகனத்தில் கடத்திய1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

தினத்தந்தி

ரேஷன் அரிசி பறிமுதல்

குடிமைபெருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்படி நாமக்கல் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் ஈஸ்வரன் கோவில் அருகில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அதில் 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன்அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன்அரிசி மூட்டைகளை சரக்கு ஆட்டோவுடன் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

இது தொடர்பாக ரேஷன்அரிசி மூட்டைகளை கடத்தி வந்த சரக்கு வாகன டிரைவர் வள்ளிபுரத்தை சேர்ந்த பாஸ்கரன் (வயது45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நிர்மல்குமார் என்பவரை பேலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு